சனி, 12 டிசம்பர், 2020


 

துவண்டு  விடும்  சிறுமி  அனிச்சி

 

 முகவுரை

பெண்கள் பலவிதம் . கோபம்  கர்வம், அசடு, புத்திசாலி சுயநலம் போன்ற நீண்ட  குண பtட்டியல்அவர்களுக்கு  உண்டு அதில் தொட்டால் அல்லது உரத்து  பேசினால் துவளும் உள்ள  குணம்  சில பெண்களுக்கு அனிச்சமலரைப் போல்    உண்டு அந்த குணம்  உள்ள அன்னிச்சியின்  கதை  இது.

 

****

பூனகரி ஒருகாலத்தில்  ஏரிக்கு அருகில் அல்லி  ராணியின் பூந்தோட்டம் இருந்தது என்று  வரலாறு சொல்கிறது. இப்பிரதேசம் ஒரு குறிப்பிடத்தக்க தொல்லியல் ஆய்வுக் களமும் ஆகும். அதோடு  துறை முகமமாக  இருந்தது   அதோடு  வடக்ககையும் தெற்கையும் இணைக்கும்  வழியாக இருந்து   வருகிறது பூநகரி சங்குபிட்டி பாலம் யாழ்ப்பாணத்துக்குச் செல்வதற்கான மாற்றுப் பாதையாகும்.பூநகரியில் விளையும் மொட்டைகறுப்பன்,பச்சைப்பெருமாள் ஆகிய பாரம்பரிய நெல்லினங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் அரிசி உலகின் தலைசிறந்த அரிசி வகைகளுள் ஒன்றாகும்.பச்சைபெருமாள் அரிசி நீரிழிவு நோயை கட்டுபடுத்தவல்லது. பூநகரி அரிசியை மக்கள் அதிகம் விரும்புவதால் உள்ளூர் சந்தை முதல் உலக சந்தை வரையில் நல்ல கேள்வி நிலவுகின்றது

பூநகரியில்  பெண்கள் மாகாணப் பாடசாலை உண்டு . இக் கிராமத்தில் வாழ்ந்த பிரபல எழுத்தாளர்  ஆசிரியர்   மணி என்ற மணிவண்ணன் ஒரு இயற்கை விரும்பி. தான் பிறந்த  கிராமத்தையும் அதன் இயற்கை  வளத்தையும்  நேசிப்பவர். தமிழ் ஆசிரியரான மணி  கவிதை எழுதுபவர்  தனது கிராமத்தில்  பூக்கும் மலர்களை பற்றி எழுதி பாராட்டு பெற்றவர்

வானை நோக்கி வளர்கிறது மரம். அது ஒளியின் மீது கொண்ட நாட்டத்தின் அழகான குறியீடு மலர். ஒவ்வொரு மலருக்கும் ஒரு நிறம் உண்டு, மணம் உண்டு. அதேபோல் ஒவ்வொரு மலருக்கும் தனித்தனிக் குணம் உண்டு என்கிறது ஆன்மிகம். இப்பூவுலகெங்கும் மரம், செடி, கொடி, சமுத்திரம், மலை, பறவைகள் மனித இனம், விலங்குகள் என்பன இயற்கையில் பரிணமித்துள்ளன. இவைகள் அனைத்தையும் விட மிகவும் அழகான தோற்றத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளவை தான் மலர்கள் என்பதும் மறுப்பதற்கில்லை. மரம், செடி, கொடிகளில் பூக்கும் மலர்களின் நிறம், அதன் மருத்துவக் குணம், சுகந்தம், கவர்ச்சியான தோற்றம் என்பன இவ்வுலகில் உள்ளோரை பிரமிக்க வைக்கின்றன என்பது நிதர்சனமாகும். மிலேனியம் ஆண்டாக மிளிரும் இன்றைய காலகட்டத்தில் கூட வீட்டுத் தோட்டங்கள், பூஞ்சோலைகள் பூங்காவனங்கள் என்பனவற்றில் கோடான கோடி பூக்கள் தினமும் மலர்வதை அவதானிக்கலாம். இதனாலன்றோ “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா” என்று இயற்கையைப் போற்றினர் நமது முன்னோர்கள். அதே வேளை “எத்தனை கோடி பூ மலரும்” என்றார் கவிஞர் கண்ணதாசன். அத்தகைய மலர்களின் சிறப்புகளையும், மருத்துவப் பண்புகளையும் விளக்கிக் கூறுவதே இக்கதையின் நோக்கமாகும்.

 

மலர்கள் நமக்கு இயற்கை நல்கிய கொடை, அவைகளில் தான் எத்தனை எத்தனை வர்ணங்கள், பல்வேறுபட்ட வடிவங்கள், விதம் விதமான நறுமணங்கள், மருத்துவக் குணங்கள் என்று அதன் தாற்பரியங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். கண்ணுக்குக் கவர்ச்சியாகவும், மனதுக்குச் சாந்தியையும், கிளர்ச்சியையும் நல்குவது பூக்கள் தான் என்பது வெள்ளிடை மலை. மலர்கள் புனிதமானவை. இறைவனுக்கு அர்ப்பணிக்க கூடியது. மணமக்கள் கழுத்தில் மாலையாகப் பொலிவது மலர்கள் தான் என்பதையும் நாம் அறிந்தவை தான். மகரந்தங்களால் இனிக்கும் தேனை வழங்கி வருவதும் மலர்களே. பல்வேறு சிறப்பு மிக்க அத்தகைய மலர்கள் மனித குலத்திற்குப் பிணி நீக்கும் ஔடதமாகவும், முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர் என்றும் அறிய முடிகின்றது. சித்த மருத்துவ நூலைப் புரட்டிப் பார்த்தோமாகில் பல்வேறு வகையான மலர்களின் மருத்துவக் குணங்கள் சிறப்புறக் கூறப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு வகையான மருத்துவக் குணம் உண்டு. இன்று கூட தென் இந்தியக் கிராமங்கள் சிலவற்றில் நோய்களுக்குப் பூக்களை மருந்தாகிப் பயன்படுத்தி எளிய முறையில் சிகிச்சை பெறுகின்றனர். இது செலவில்லாமல் சுலப மருத்துவம் என்பது கண்கூடாகும். பலகோடி மலர்கள் உலகில் உள்ளன. இருப்பினும் நமது அனுபவம் மற்றும் பழக்கத்தில் உள்ள மலர்களின் மருத்துவக் குணம் பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும்

 

நமது உடலுக்குப் பலமும், மனதுக்கு நலமும், வாழ்வுக்கு வளமும் சேர்க்கிற ஆற்றல் மலருக்கு உண்டு. மலர் தூவி இறைவனை வழிபடுங்கள்

முகர்ந்தால் நொந்து மூடி வாடும் அனிச்சம் பூ. ஆனால் விருந்தினரோ முகம் கோணி நோக்கினாலே வாடி விடுவர் என்ற பொருள்  உள்ள  குரளில் அனிச்சம்  மலரை  வள்ளுவர்  குறிப்பிட்டது அனைவரும் அறிந்ததே.

இது போன்ற அனுபவங்கள் பலருக்கும் சில சமயம் நேரிடத்தான் செய்கிறது. அது சரி. அனிச்சம் பூ பற்றி அறிந்திருக்கிறீர்களா? இது பொதுவாக ஒரு களைச் செடியாகக் கருதப்படுகிறது.

அனிச்சம் பூவின் தாவரப் பெயர் ஆங்கிலத்தில் ஸ்கார்லெட் பிம்பெர்னல் ( Scarlet Pimpernel) என்று அழைக்கப்படுகின்றது.

மேலை நாடுகளில் அனிச்சம் பூவை வைத்து வானிலை அறிவார்களாம். வானம் மூடினால் மலரும் மூடுமாம். அதனால் "Poor Man's Barometer" என்றும் அறியப்படுகிறது.

 

****

 தனது பூநகரி    கிராமத்தில் காட்டில் பூக்கும் மலர்களில் அனிச்சம் மலர் மிகக் குறைவு என்பதை  மணிஅறிவார்

திருமணமாகி பல  வருடங்களுக்கு   பின் தனக்கும்  துணைவி மல்லிகாவுக்கும்  பிறந்த மகளுக்கு அனிச்சி  என்று  மணி  பெயர்  வைத்தார்

 பிறந்த போதில் இருந்தே  அனிச்சி   சாந்த முகமும்  பயந்த  சுபாவம்  உள்ளவள் . உரத்த சத்தம்  போட்டு  யாரும் பேசினால்  அவள் அழுது முகம்  சுருங்கி விடுவாள் . ஒரு நாள்  மணிக்கும்  மல்லிகாவுக்கும்  வீட்டில்  வாக்குவாதம்   நடந்தது . சத்தம்  கெட்டு ஓ வென்று அனிச்சி அழுதுவிட்டாள் . அதன் பின் மணியும் மல்லிகாவும் அனிச்சி   முன்  வாக்குவாதம்  செய்வதில்லை . இன்னோரு வீதியில்  இருவர்  சண்டை   போடுவதை  கீறி ஒ வென்று   அனிச்சி அழுது  விட்டாள் 

 மணி வீட்டில்  பல மலர் செடிகள்   உண்டு ;

“ அப்பா உங்களிடம்  ஒரு கேள்வி கேட்கட்டுமா “?

“கேள் மகளே”

“எனக்கு ஏன்  யாருக்கும்  இல்லாத அனிச்சி என்ற புது பெயர்  வைத்திருக்கிறீகள்”?

“ உனக்கு தெரியும் எனக்கு மலர்கள் மேல் ஆசை என்று  பொதுவாக ரோஜா ,மல்லிகா  செவ்வந்த,   அல்லி, .தாமரா என்று என்றுபொதுவாக பெயர்  வைப்பார்கள் . அனேகருக்கு அனிச்ச  மலர் ஒரு மென்நமையான  தொட்டவுடன்  துவளும்   மலர் என்பது தெரியாது. உனக்கு அந்த மலரின் குணம் உண்டு அதனால் அந்த  பெயரை  உனக்கு  வைத்தேன்” 

“ நன்றி  அப்பா என்னக்கு  விளக்கம் கொடுத்ததுக்கு இந்த மலர் பூநகரியில் மிக குறைவு  அப்பா”

“எனக்கு அது தெரியும் என் தோட்டத்தில் ஒரு அனிச்சம்  செடி  உண்டு  அனிச்சி  நீ பலரால் பாராட்டப்படுவாய்  இருந்து பாரேன் உனக்கு  என்ன  நடக்க  போகுது என்பதை ” மணி மகளுக்கு சொன்னார்

****

பூநகரி கிராமத்தில்  உள்ள  பாடசாலையில்  படித்த  மாணவிகளில பணக்கார பக்கமும் ஏழை பக்கமும் இருந்தது. அனிச்சி  ஏழ்மையான பக்கத்தைச் சேர்ந்தவரள். அனிச்சியின்  பெற்றோர் தங்கள் வருமானத்திற்காக மலர் செடிகள் வளர்த்து  கோவிலுக்கு  விற்பது  வழக்கம்.

அனிச்சிக்கு பத்து வயது, அவள் ஒவ்வொரு நாளும் மலர்  தோட்டத்தில் பெற்றோருக்கு உதவி செய்வாள். அவளுக்கு வாழ்க்கையின் ஆடம்பரங்கள் எதுவும் இல்லை, ஆனால் அவளுகக்கு  நடந்த சிறிய விஷயங்கள் மகிழ்ச்சியாக இருந்தது.  தனியாக நின்று  மலர்களுடன்  பேசுவாள்  குருவிகளுக்கு தானியம்  போடுவாள்   . கிராமத்தின் பண வசதி  குறைந்த சமூகத்தை சேர்ந்த பெண் அனிச்சி,அவள். பணக்கார பெண்கள் அவளை விரும்பாததால் வகுப்பில்  மற்றவர்கள்  அதிகம்  பேசவது  குறைவு . ஆனால் உதவி  செய்வதில்  முன்னுக்கு  நிற்பாள்.  மிகவும் கனிவான இதயமுள்ள பெண் அனிச்சி . மற்ற பெண்களைப் போலல்லாமல் அவளிடம்  விலை  =உயர்ந்த  காலணிகள் அல்லது புதிய உடைகள் அல்லது  நாகைகள் இல்லை. அவள் வகுப்பில் தனியாக உட்கார்ந்து படிப்பாள் , இந்த பெண்கள் அனைவரையும் தன் நண்பர்களாகக் கொண்டிருப்பதைப் பற்றி கனவு காண்பாள். மதிய உணவின் போது அனிச்சி பொதுவாக சாப்பிட வீட்டிற்கு செல்வாள், வகுப்பில் தனியாக சாப்பிடுவதை விட இது நல்லது.  என்று அவள்  முடிவு  எடுத்தாள்/

அவள்து ஆசிரியை அவல மீது மிகவும்அன்பாகவும் , கனிவாகவும் இருந்தாரள் மற்ற பெண்களை அனிச்சியை ப்போல் அமைதியாக் இருக்க எப்போதும் ஊக்குவிப்பார், அது ஒருபோதும் நடக்கவில்லை.

 

அன்று ஆகஸ்ட் 21 ஆம் தேதி அவளது   வகுப்பு ஆசிரியையின்    பிறந்த நாள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் மாணவிகள் ஆசிரியருக்கு ஒரு நல்ல பரிசை கொடுப்பார்கள்  , அனிச்சி ஒருபோதும்  பரிசு  கொடுப்பது இல்லை, காரணம்  அவளிடம்  பணம் இல்லை.அதனால் யாரும் அவளிடம் எதுவும் சொல்ல மாட்டார்கள்ப். ஒரு பணக்கார மாணவி சுனிதா, மற்ற சிறுமிகளிடமிருந்து பணத்தை செர்தாள் , ஆசிரியைக்கு பரிசு மற்றும்  வாழ்க்து அட்டை வாங்க முடிந்தது . அடுத்த நாள் சுனிதா உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் பள்ளிக்கு வராததால் சிறுமிகள் வருத்தப்படுவதை அனிச்சி கவனித்தாள்.. அனிச்சி மதிய உணவுக்காக வீட்டிற்குச் சென்று, அப்பாவிடம் கொஞ்சம் பூக்களை தோட்டதில்    பறிக்க முடியுமா என்று கேட்டாள். அவள் ஒருபோதும் தன் பெற்றோரிடம் எதையும் கேட்டதில்லை,

பள்ளிக்கூகடத்தில் என்ன நடந்தது, அவளின் நண்பிகள் ஆசிரியருக்கு பரிசு  கொடுக்க  முடியாமல் எப்படி வருந்துகிறாள் என்று தன் தந்தையிடம் சொன்னபோது, ​​அவளுடைய தந்தை அவளுக்கு ஒரு அனிச்ச  மலர் கொத்தை தேர்ந்தெடுத்து  கொடுத்தார் . அனிச்சி தனது மதிய உணவை ஒரு அட்டை தயாரிப்பதில் கழித்தாள் அவளுடைய தந்தை அவளது பூக்களை சிவப்பு நாடாவால் போர்த்தினார். அனிச்சி மதிய உணவுக்குப் பிறகு தொடங்கிய வகுப்பிற்கு விரைவாக ஓட வேண்டியிருந்தது. அவள் வகுப்பு  கதவைத் தட்டினாள், தாமதமாக வந்ததற்கு ஆசிரியை யிடம் மன்னிப்பு கேட்டாள். அவள் பூக்களோடும்  மற்றும்  வாழ்த்து அட்டையுடன் ஆசிரியரிடம் நடந்து செல்வதைக் கண்டு வகுப்பு அதிர்ச்சியடைந்தது.   அவள் கையில்  இருந்த புதுமையான  பூக்கள் மிகவும் அழகாக இருந்தன. அவள் அதை ஆசிரியையிடம் கொடுத்தாள். ஆசிரியை  அவளைப் பார்த்து புன்னகைத்து அட்டையைத் திறந்தார். ஆசிரியை அதை சத்தமாக வாசித்தாள், "முழு வகுப்பிலிருந்தும் பிறந்தநாளுக்கு  இந்த குரள் வாழ்த்துக்கள் “=மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
.". வகுப்பு முழுவதும்  திருக் குரள் கேட்டு -அதிர்ச்சியடைந்தது.

 

ஆசிரியை , கண்களில் கண்ணீருடன்  அனிச்சிக்கு மிகப் பெரிய அரவணைப்பைக் கொடுத்தார், ஆசிரியை செய்வதைப் பார்த்து முழு வகுப்பும் அடிவந்து.இறுக்கமக அனிச்சிக்கு அணைப்பைக் கொடுத்தது. அவர்கள் அனைவரும் அவளுடன் அழுதார்கள், அனிச்சியின் நண்பராக இருப்போம் என்று உறுதியளித்தனர்.

இப்போது ஆறு மாதங்களுக்குப் பிறகு அனிச்சிக்கு வகுப்பில் அதிக நண்பர்கள் உள்ளனர். எல்லா சிறுமிகளும் அவளை நேசிக்கிறார்கள், அவர்கள் அனைவரிடமும் அவள் சிறந்தவள் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அனிச்சிக்கு இப்போது தன் பள்ளிக்கு செல்வதை விரும்புகிறாள். அன்பும் கனிவான இதயமும் தான் நம்மை சிறந்த மனிதர்களாக ஆக்குகின்றன

 

(யாவும் புனைவு)

 

 

                     ஒரு நண்பனின்  மாவீரர் நினைவேந்தல்

                                    பொன்  குலேந்திரன் ( கனடா)

முகவுரை

தமது  இனத்தின் உரிமைகளுக்குத்  தம் உயிரை பணயம் வைத்தவர்களுக்கு வருடா வருடம்  அவர்கள்  நினைவாக  தீபம் ஏற்றி அவர்களின்  ஆன்மா சாந்தி பெற வழிபடுவது மனிதனின் உரிமை . புத்தர் கூட ஆன்மாவுக்கும் எல்லா    இனங்களுக்கும் மதிப்பு கொடு என்று போதித்தார். பௌத்த மதம் இலங்கையின் அரச மதம் என்று தம்பட்டம் அடிக்கும் சிங்கள அரசசியல்வாதிகள்  உண்மையில் புத்தரின் போதனைகளை பின்பற்றுகிறார்களா  என்பது கேள்விக்குறி .   ஆயிரம் சிப்பிக்குள் ஒரு முத்து என்பது போல்  ஆயிரக்  கணக்கில் வாழும் சிங்களவர்களிடையே மனிதத்துக்கு மதிப்பு கொடுக்கும் ஒரு சிங்களவனும் இல்லாமலா போவான் ?  உண்மை  சம்பவத்தை வைத்து  புனைவு  கலந்த இந்தக் கதை  சற்று  வித்தியாசமான பார்வை கொண்டது.

*****

குணராசா , குணபாலா  இருவரும் வேறு இனங்களான தமிழ் சிங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள்     பெயருக்கு  ஏற்ப  இருவரும்  நல்ல குணம் உள்ளவர்கள். குணராசா ஒரு  ஓய்வு பெற்ற  அரசாங்க அதிகாரியின் மகன் அவனின் தந்தை  மகாலிங்கம்   லகிதராக  அரச சேவையில் சேர்ந்து தேற்கில்  சிங்கள பகுதிகளில் வேலை   செய்ததினால்    சிங்களம் ,தமிழ் ,ஆங்கிலம்  ஆகிய  மூன்று மொழிகளும்  பேசும் திறமை இருந் படியல்  இலங்கை பரிபாலன செவையில்  நியமனம் பெற்று  சேவை ஆற்றியவர் அவரின்  ஒரே மகன் மகன் குணராசா படிப்பில் சூரன். யாழ்ப்பணம் இந்துக்  கல்லூரியில் படித்து , கொழும்பு   பல்கலைக் கழகத்துக்கு  தேர்வாகி ,அறிவியல் துறையில் படித்தவன் .அப்போது பல்கலைக்கழகத்தில் படிதவர்களிடையே சிங்களவர், தமிழர் ,முஸ்லீம் என்ற  பாகு பாடு இருந்ததில்லை.

இலங்கை   வட மாகாணத்தில் உள்ள கொக்குவில் கிராமத்தை   பிறப்பிடமாக கொண்ட குணராசா  சுமார்  நானூறு கிலோ மீ தூரத்தில்  தேற்கே  கொழும்பில்  உள்ள  பல்கலைக்கழகத்தில்  படிக்கும்  சந்தர்ப்பம் அவனுக்குக் கிட்டியது

 அவனோடு கூடப் படித்தவன் தேற்கில் உள்ள காலி நகரைச் சேர்ந்த  குணபால.

, குணதிலக்க   என்ற   மீன் வியாபாரியின் மகன் குணபால .அவன் படித்தது   காலி ரிச்மண்ட்  கல்லூரியில் ,  குணதிலக்ககாவுக்கு   ஒரே மகனான குணபால பெயருக்கு ஏற்ற  நல்லகுணம்  உள்ளவன் . இன, மத,.  மொழி வேற்றுமை பார்க்காதவன் அவனின் தந்தை குணதிலக்க  வியாபாரம்  நிமித்தம் மன்னார்      சென்று இருந்த போது   மீனவர்    குழுவின்  சம்மட்டி மகள் மேரியை காதலித்து திருமணம் செய்தவர்  அதனால்  குணபால  ஓரளவுக்கு த்  தமிழும்  பேசுவான்.

 

வட மாகாணத்தில்  உள்ள கொக்குவில் கிராமத்தை   சேர்ந்த குணராசா   படித்தது யாழ் இந்துக் கல்லூரியில்.  அவனின்  தந்தை   மஹாலிங்கம் தென் பகுதியில் வேலை செய்த போது அவருக்கு  அறிமுகமானது  சில சிங்கள குடும்பங்கள். அதனால் குணராசா சிங்களம் ஓரளவுக்கப் பேசுவான் .கொழும்பு  கச்சேரியில்  மஹாலிங்கம்   வேலை செய்த காலத்தில் இனக் கலவரத்தினால் பாதிக்கப்  பட்டதினால் ஓய்வு எடுத்து,  தன் சொந்த ஊருக்கு திரும்பினார் . அவரின் மகன்  குணராசா    கொழும்பு  பல்கலை  கழகத்தில் படிக்கும் போது அவன் தந்தை யுடன்  வேலை செய்த நண்பர் ஜெசிங்கா  என்பவர் வீட்டில்  ஒரு  அறையில்  தங்கி படித்தான். ஜெசிங்காவின் தூரத்து உறவினர் குணதிலக்க .அதனால் குணபாலாவும் கொழும்பில் தெகிவளை இல்  இருந்த ஜெய்சிங்காவின் வீட்டில் குணராசா  இருந்த  அறையில்தங்கி படித்தான் இருவரும் சைக்கிலில் பல்கலை  கழகத்துக்கு ஒன்றாகச்  செல்வார்கள். முற்பிறவியில் இருந்த தொடர்போ  என்னவோ காலப்போக்கில்  இருவரும் நெருங்கிய  நண்பர்களானார்கள் .

 

கொழும்பு  பல்கலை  கழக மாணவர்  சங்கத்தின் தலைவர்  பதவிக்கு குணபால போட்டி இட்ட போது அவனுக்கு தமிழ் மாணவர்களின் வாக்குகள் சிலவற்றை குணராசா   பெற்றுக்கு கொடுத்ததினால்  குணபால சங்க  தலைவரானான் . தமிழ், சிங்கள, முஸ்லீம் என்ற பாகு பாடு காட்டாமல்  மாணவர்கள் பலரினதும்  பிரச்னைகளை த்தீர்த்து  வைத்தான் . .குணபாலஅறிவியல் துறையில் பௌதீகத்தில்  சிறந்து விளங்கினான். கணிதத்தில் சிறந்து விளங்கியவன்  குணராசா. ஒருவருக்கு ஒருவர் பாடங்களில் சந்தேகங்களை நிவர்த்தி செய்து  கொண்டனர் .அதனாலும்  அவர்கள் நட்ப வளர்ந்தது

 

இருவரும் முதலாம்  நிலையில் அறிவியல்  துறையில்  பட்டதாரி பட்டம் பெற்றனர் .குணராசா யாழ் இந்துக் கல்லூரியில் பிக் படிப்பிக்கத் தொங்கினான்  குணபால கொழும்பு  ராயல் கல்லூரியில்  படிப்பித்தா ன் 

 கிரிக்கெட். ரக்கர் ஆகிய  விளையாட்டுகளில்   குணபால சிறந்து  விளங்கியதால் அவனுக்கு இலங்கை போலீஸ்  சேவையில் உதவி அத்தியட்சகர்  வேலை          கிடைத்தது . நண்பர்களிடையே  வேலை நிமித்தம் தொடர்பு  குறைந்தது.  குணபால தன் உறவினர் மகள் ரன்மெனிக்கே  என்ற   ஒருத்தியை  திருமணம் செய்தான். திருமணத்துக்கு மூன்று நாட்களுக்கு  முன்பே குணபலாவின் வீட்டுக்கு   குணராசா  சென்று உதவிகள் பல செய்தான்.

அந்த சமயம்  குணபால கேட்டான் “என்ன   மச்சான்   நீ படிப்பிக்கும் , கல்லூரியில் இருந்து பல மாணவர்கள் விடுதலை புலிகள் இயக்கத்தில் சேர்ந்து விட்டார்கள்  என அறிந்தேன்  என்ன காரணம்?

 

“எல்லாம் அரசின்  கல்வியில் தரப் படுதல் கொள்கை தான் காரணம். நன்றாக படித்தும் பல்கலைக் கழகத்துக்கு  போக முடியவில்லை    வேலை கிடைகவில்லை என்ற  அந்த விரக்தி தான் அந்த மாணவர்களுக்கு”   குணராசா நண்பனுக்கு  விளக்கம்   சொன்னான் .

 

“ ஒரு மாணவனின் திறமைக்கு அரசு முதலிடம் கொடுக்க

வேண்டும்  நான் இந்த  தரப் படுத்தலை  எதிர்க்கிறேன் ” என்றான் குணபால.

“அது சரி  குணபால நீ இப்போ  பலிலீசில்  அதிகாரியாக இருகிறாய்

எப்போ யாழ்ப்பாணத்துக்கு  மாறுதல் கிடைத்து வருவாய் “?

 “அது நான் எடுக்கும்முடிவல்ல . எனக்கு இந்த  போர்  சூழ்நிலையில் அங்கு  வந்து வேலை செய்ய  விருப்பமில்லை

நான்  நினைத்தபடி  அங்கு   வர முடியாது . உயர் அதிகாரிகள் முடிவு  எடுக்க வேண்டும்.  அதோடு அரசியலும் கலந்து இருக்கிறது “    பதில்  சொன்னன்  குணபால .

 “ நீ யாழ்ப்பாணத்துக்கு மாறுதல் கிடைத்து வந்தால் எங்கள் கொக்குவில் வீட்டில் நீ உன் வீடு மாதிரி தங்கலாம் என் அம்மா சுடும் தோசை உனக்கு பிடிக்கும் அதோடு  முட்டை அப்பமும் செய்யது தருவா,

 

:உன்  அப்பாவையும்  அம்மாவையும்  நான்  கேட்டதாகச்   சோல்   இருதடவைகள் உன்  கொக்குவில்  வீட்டுக்கு  வந்திருக்கிறன்  இருவரும் சேர்ந்து கூழ்  குடித்தது  உன் வீட்டுத்  தோட்டத்து   மாம்பழம்  சாப்பிட்டது , உன் ஊர்  கோவில்  தேர்  திரு விழாவுக்கு  இருவரும்  வேஷ்டி  கட்டிக்  கொண்டு  போனது  இன்னும்  என் நினைவில்  இருக்கு .  வேஷ்டி  கட்ட தெரியாத எனக்கு  நீ தான் கட்டி  விட்டனி . நாம் இருவரும் கொழும்பில் ஒரே அறையில் இருந்து படித்த  மாதிரி திரும்பவும்  சந்திக்க  இறைவன்  வழி  விட வேண்டும்”  என்றான் குணபால  தனது பழைய  நினிவுகளை 

 நினைத்து .

****

இரண்டு வருடங்கள்  இரு  நண்பர்கள் ககும்  ஈழத்து போர் காரனத்தால் தொடர்பு அற்று போயிற்று.  அதோடு  லண்டனுக்கு  தேர்ச்சி   பெற குணபால ஒரு வருடம்  சென்று  திரும்பினான் .

 

ஒரு நாள்  குணபாலாவின் உயர் அதிகாரி  துணை இன்ஸ்பெக்டர்  ஜெனரல் அவனை  தன் அறைக்குள் அழைத்து “குணபாலா உன்னிடம் ஒரு கேள்வி கேட்கலாமா”  என்றார் .

 

“கேளுங்கள் சேர். தெரிந்தால்  பதில்  சொல்லுகிறன”.

“உனக்கு  உன்னுன்  படித்த  மஹாலிங்கம்  குணராசா என்பவனைத் தெரியுமா “?

 

“நிச்சயமாக் தெரியும்  சேர்  அவன் என்  நீண்ட  கால நண்பன்”

 

“அப்படியா  .உனக்கு தெரியுமா அவன்  ஒரு கரும் புலி என்று”

 

“ என்ன சேர் சொளல்லுகிரீர்கள் என்னால் நம்ப  முடியவில்லையே”

 

“ நான் சொல்வது எனக்கு வந்த சிஐ டி ரிபோர்ட்டின்  படி  அவன்  தாக்குதல்   ஒன்றில் இறந்து விட்டான்”

 

“உண்மையாகவா சேர்?  அவன்  புலிகள் இயக்கத்தி சேர்ந்து இருக் மாட்டானே “

 

“ இயக்கத்தில் அவன் சேர்ந்த் காரணம் அவனின் தாய் குண்டு  வீச்சில் உயிர் இழந்தது அப்போ அவனின் தந்தை உயர் தப்பி ஒரு காலை’ இழந்து விட்டார்  அதோடு  அவன்  படிப்பித்த சில  மாணவர்கள்  இயக்கத்தில்  இருந்ததும்   ஒரு காரணம்” 

 

” அவனின் முடிவை நான்  எதிர்பார்க்கவில்லை . விதி அவனை சோதித்து

விட்டது” அமைதியாக  பதில்  சொன்னான்  குணபால்.

”இன்னொரு  செய்தி  உமக்கு உண்டு “

 

“என்ன செய்தி சேர் “

”குணபால,  மாவீரர் தினமன்று  யாழ்ப்பாணத்தில் அசம்பாவிதம்  நாடக்காமல் இருக்க  கவனிக்க   சோல்லி   நீர்  தமிழ்  பேசுவதால்  உம்மை  அங்கு  மாற்ற  சொல்லி  மேலிடத்தில்  இருந்து ஓடர்  வந்திருக்கு”

 குணபால வயடைத்துப் போய் நின்றான் .

 

*****

 அன்று  மாவீர தினம் .கோவிட் வைரசை   அடிப்படையாக வைத்து   தடை  சட்டம்  கொண்டு வந்தது போலீசும்  இராணுவமும் வடக்கிலும்  கிழக்கிலும்  குவிக்கப்பட்டன . குணபால  தன் கடமையை   செய்தாக வேண்டும் சட்டத்தை அது சரியோ பிழையோ   மதிக்க வேண்டும் .

 

பகல் முழுவதும் கடமை செய்து முடித்த பின்னர்  அன்று இரவு   தன்போலீஸ்  யுனிபோர்மை  மாற்றிக்  கொண்டு  ஒரு மலர்  வலையம் ஒன்றை  வாங்கிக்  கொண்டு கொக்குவில்  உள்ள  குணராசா  வீட்டுக்கு த்ரீ  வீலர் ஒன்றில்    சென்றான் .  மாவீரனான  தன் நண்பனுக்கு  அஞ்சலி  செலுத்து சாதாரண மனிதானாக   குணபால வந்திருக்கிறான் என்பதை  மகாலிங்கம்  கண்டார் . நீ  எப்படி இங்கே “?என்று கேட்டார்   அமரரான குணராசாவின்   தந்தை .

“அங்கிள்   கடமை வேறு என்  நட்பு  வேறு என்று சொல்லி  குணராசா படத்துக்கு  முன் மலர் வலையம் வைத்து  கண்களில்  கண்ணீர் ஓட அஞ்சலி   செலுத்தினான்  குணபால,  வீட்டுக்கு  அருகில்  உள்ள அவனும்  குணராசா வும் தேர்  திருவிழாவுக்கு  சென்ற முருகன் கோவிலில் இருந்து மணியோசை கேட்டது .

 

( யாவும் புனைவு)

 

 

       

                           கொரோனவும்  கோகிலா ஆச்சியும்

                        பொன்  குலேந்திரன்   (  கனடா )

“எடியே பிள்ளை இதென்ன புதுச்  சட்டம் நாளுக்கு நாள் கவர்மேந்து போடுது.  எதோ ஊரடங்கு சட்டமாம்.  முக  மூடி அணியும் சட்டமாம். சமூகத்தில் நெருங்கி  பழகுவதுக்கு தடையாம் ”     கோகிலா கிழவி புறு புறுத்தாள்.

 

“:இதேன்ன ஆச்சி  விடிய காத்தாலை  உண்டை புருசன்   சுப்பிரபபாதம் சொல்லுவது போல்  சொல்லுகிறாய் “கோகிலாவின்  பேத்தி  டாக்டர் சந்திரமதி  சொன்னாள்.

 

“இல்லை சந்திரா உன்னுடைய கலியாணத்துக்காக  நான் என் பென்சனில்  சேர்த்து வைத்த   பணம் செலவு செய்து உறவினர்களையும்,  ஊர் சனங்களையும்   கூப்பிட்டு ஒரு பெரிய கலியாண மண்டபத்தில்   செய்து  அவர்களுக்கு  சாப்பாடு  போட  முடியாதாம். அப்படி  குறைந்த  சனங்களோடை  செய்தாலும்  கலியாணத்துக்கு பரிசுகள்  கொண்டு  வருபவர்கள் முகம் தெரியாமல் முக மூடி  அணிந்து  இருக்க  வேண்டுமாம்  தம்பதிகளை   நெருங்கி தொட்டு  ஆசீர்வதிக்க  முடியாதாம்    இதென்ன முறை?    காலம்  மாறிப் போச்சுதடி. கலியுகம் நடக்குதடி     கோகிலா கிழவி  பேத்திக்கு  முறையிட்டாள்.

“ ஆச்சி கொரனா வைரஸ்  மூன்றாவது  அலை ,எங்கடை நாட்டிலை வேகமாக பரவுது. அதுவும்  அந்த  கிருமிக்கு முத்தோர் மேல் அதுக்கு பாசம் அதிகம்.   பலமுதியோர்   சாகினம்.  என் அம்மாவின் கூட்டாளியின்  எழுபது  வயது தாய் கனடாவுக்குப் போய் வந்தவ நோயையும்  கூட்டி வந்து  இங்கை ஒரு மாதத்தில்  ஆள்  சரி.

என் கலியாணம் நடக்கும் மட்டும்  என் சொல்  கேட்டு பிடிவாதம் பிடிக்கமல் நட  அடிக்கடி பக்கத்து வீட்டு   பங்கஜம்     கிழவியோடை  ஊர்  வம்பு பேசப் போககாதே அவ முக  மூடி  அணிவதில்லை .   கடைக்கு  சுருட்டு   வாங்க அடிக்கடி போகாதே.  டாக்டர்களும்  நேர்சுகளும் வேலையில் பெரும் கஷ்டப் படுகினம் ஆசுபத்திரிகள்  எல்லாம்  கொரோன நோயாளிகளால் நிரம்பி வழியுது “
 

“உந்த  டாக்டர் படிப்பை நீ தானே விரும்பி படிச்சனி இப்ப கஷ்டப் படு “”  

 

“ நான் என்ன செய்ய ஆச்சி உண்டை மகன் , எண்டை அப்பா தான் தன் அண்ணன் மகள் டாக்டருக்கு படிச்சாவளாம் அதனாலை நானும் டாக்டருக்கு  படிக்க வேண்டும் எண்டவர்”

 

“அதுதான் ஆசுபத்திரியில் இருந்து நேரம்  கழித்து வருகிறாயாக்கும்  உண்டை  உடம்பை  கவனித்து கொள்  பிள்ளை.  எனக்கு  இருப்பது நீ ஒரு பேத்தி மட்டுமே”  கோகிலா கிழவி கவலையோடு  சொன்னாள்.

 

“அப்பா  சொன்னார் டாக்டருக்கு கை  நிறைய சம்பளம்  வருமெண்டு அதோடை அந்தஸ்து வேறு  உண்டு எண்டும் சொன்னார் .  கொரோனா போன்ற  நோய்  வரும்  எண்டு  படிக்கும்  போது யார் கண்டது. தோற்று  நோய் வந்ததால்  கஷ்டப்பட்டு  வேலை செய்வது என் கடமை”

 

“ நான்  கேள்வி பட்டேன்  எங்கடை இறச்சிகடை காசீம் காக்காவின் மூத்த மகன்  இஸ்மாயில் துபாயில் இருந்து வந்த போது  சமான்கள்  கொண்டு வராமல் கூடவே கொரோனாவையும்   கொண்டு  வந்தானாம்.  அதாலை அவன் இறந்த போது  அவன் உடலை முஸ்லீம்  முறைப்படி

புதைக்காமல் கொரனாவால்  இறந்த படியால் தகனம் செய்து போட்டுதாம் அரசு.ஒருத்தரையும் கிட்ட நெருங்க விடவில்லையாம்  எப்படி இருக்கு சட்டம் “?

 “அது சரி ஆச்சி  யார்  உந்த கதை  உனக்குச் சொன்னது ”?

“வேறு யார் ஊர் செய்தி தெரிந்த பக்கத்து வீட்டு பங்கஜம்  கிழவிதான்.

  அது சரி செத்தவனில் இருந்து அந்த கிருமி மற்றவர்களை பரவுமே  பிள்ளை“?

“ நான் அறிந்த மட்டில்\ இல்லை.  COVID-19 நோயால் இறந்தவர்களை அடக்கம் செய்யலாம் அல்லது தகனம் செய்யலாம். எஞ்சியுள்ளவற்றைக் கையாளுதல் மற்றும் மாற்றியமைத்தல் ஆகியவற்றைக் கட்டளையிடக்கூடிய அதிகாரம்  தேசிய அரசினது. இறந்த உடல்களிலிருந்து COVID-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2, வைரஸ் பரவும் ஆபத்து இன்னும் அறியப்படவில்லை, ஆனால் அசுத்தமான மேற்பரப்புகளுடனான தொடர்பு மூலம் பரிமாற்றம் ஏற்படலாம். மனித கொரோனா வைரஸ்கள் 9 நாட்கள் வரை பரப்புகளில் தொற்றுநோயாக இருக்கலாம்  ஆனால் கோரோனா எங்கள்  நாட்டில் அரசியலில்   பலி  வாங்கும்  செயலாகப் பாவிக்கப்  படுகிறது   உயர்  நீதி மன்றம்  கூட  அரசுக்கு  சார்பாக  மத  கொள்கையை  மதிக்காமல்  தீர்ப்பு  கொடுத்து இருக்கிறது . சட்டம்  என்று  இருந்தால் நாங்கள் அதன் படி  நடக்க  வேண்டும்.  அதுவும் மலிட்டரி ஆட்சியில்  உள்ளவர்கள்  தமக்கு  டாக்டர்களை  விட  அதிகம்  தெரியும்  என்று   செயல் படுகிறார்கள்  “..

 

“ அது சரி பிள்ளை உன்  அண்ணன் சாந்தன் இப்ப வேலைக்குப் போகாமல் விட்டில்  தன் அறியயைல் இருந்து பியர் குடித்த படி  வேலை செய்கிறான், தினமும்  கோட்டும் சூட்டும் போட்டுக்  கொண்டு  டை கட்டிக் கொண்டு  கொம்பனிகாரிலை  போகிறவன் இப்ப சாரத்தோடை   வீட்டில் இருந்து  கொம்பபியூட்டரிலை   கூட்டம் வைக்கிறான் . இது  என்ன  வீட்டில் இருந்து ஆபிஸ்  வேலை  செய்யும்  புது  கலாச்சாரம்?  சாந்தனுக்கு  சம்பளம்  கொடுபாங்களோ தெரியாது “ கிழவி கவலை பட்டாள்.

 

“அவன்டை  கொம்பனியிலை பிஸ்னல் குறைந்த படியால் பலரை வேலையில்  இருந்து நிறுத்தி போட்டினமாம்  சிலர் மரக்கரி தோட்டம் செய்யினம். இன்னும் சிலர்  கதை எழுதினமாம், இன்னும் சிலர்  இணையத்தில் படம் பார்க்கினம் . இன்னும் சிலர் குடித்து  போட்டு  மனைவி மாரோடை வெறியோடை சண்டையாம்    சாந்தன்  கொம்பபியூட்டர் வெலை செய்கிறவன்  என்பதால் அவனை வேலை இருந்து நிறுத்தவில்லை . நிலைமை  மாற பல மாதங்கள் அகும்”

“ அது கிடக்கட்டும் இப்ப நினைச் போது மளிகைக் கடைக்கு போய் சாமான் வாங்குவது எண்டால் படு  கஷ்டம் .அண்டைக்கு உண்டை கொம்மா சொன்னவ  கடையிலை மீன் வெட்டுறவன் முகக் கவசம் அணியவில்லையாம் .அவ பயத்தில் மீன்  வாங்காமல்  பெர்னாந்தோவின்

அறுக்குளா மீன்  கருவாடும்  முருங்கைக்காயும்  வாங்கிக் கொண்டு   கெதியிலை வீடு  திரும்பிட்டா .அங்கை  கடையிலை  உன் மாமியை  முக மூடியோடு  சந்தித்தவ அவவோடை  பேசவில்லையாம், டெலிபோனில்  பேசலாம்  எண்டு  அவவுக்கு  சொல்லிப்  போட்டு  வந்திட்டா” கிழவி மருமகள் கடைக்கு போன கதை  சொன்னாள்.

 

“ அப்ப ஆச்சி  அவவை முருங்கைக்காய் குழம்பு கருவாடு போட்டு  வைக்க சொல்லு.  அதோடைவேப்பம் பூ வடகமும் மோர் மிளகாயும் பொரிக்கச் சொல்லு ஆச்சி ”

 

“சொல்லுறன் சொல்லுறன். அவ இனி ஒரு  கிழமையில்  சனி
ஞாயிறு  தவிர்த்து ஒரு நாள் மட்டுமே கடைக்குப் போவாவாம் ரோட்டிலை கார்ரகள்  குறைவாம். கார்களுக்கும் கொரோனா கிருமி வந்திட்டுது  போல “பகிடியாய் சொன்னாள் கிழவி .


“ஆச்சி   கொம்பனிகள் மூடியததால்  வேலைக்கு   காரில் போகிறவர்கள்  குறைவு.  அது ஒரு விதத்தில்  நல்லது “  கிழவியின்  பேத்தி சொன்னாள்

 

“ ஏன் நல்லது பிள்ளை”

 

”காற்று  மாசு படாது.  இரைச்சலும் விபத்துகளும் குறைவு 

 ஆச்சி நீ சுருட்டு குடித்த போட்டும் சாப்பிட்ட பிறகும்  கக்கூசுக்கு  போன பிறகும் அடிக்கடி கை கழுவு  இருமைக்கையும்  தும்மும்போதும் முக கவசம் அணிய  மறக்காதே”

 

“எனக்கு  நான் பார்த்த   முகம்  மூடி போட்டு எம் ஜி ஆர்  பானும்தியோடு நடித்த   மலைக்கள்ளன்  படம்  தான் நினைவுக்கு  வருகுது  அந்த மலைகள்ளன்  போல்  என்னை நடக்க  சொல்லுறியே. கொம்மா  தினமும்  மஞ்சள்  தண்ணி  தெளித்து  சாம்பிராணி புகை காலையும் மாலையும்  காட்டுறா. வாசலிலை  துளசி  மரம் வேறு இருக்கிறது  .  வெள்ளைக் காரனை  போல்  கை  குலுக்கி   வரவேற்பது இல்லை . கை  கூப்பி  கும்பிட்டு  வரவேற்பது  எங்கள் தமிழன் கலாச்சாரம்.  வெள்ளைக் கார னும் அதை  பின் பற்றத்  துவங்கிட்டான்   எங்கள் வீட்டுக்கு உந்த கிருமி கிட்ட நெருங்காது கண்டியோ .”

 

“அப்படி சொல்லாதே  ஆச்சி   அமெரிக்காவிலை பல பேர்  சாகினம் உது ஊசி மருந்து  வரும்  மட்டும் நடக்கும்  

 

“அந்த  ஊசி போட்டால் வேறு பிரச்சனைகள் வருமா”?

“ அந்த மருந்து பல ஆய\யிரம் பேருக்கு  போட்டு பரீட்சித்து  பார்த்து  தான முடிவு எடுப்பினம் இப்ப  பரீட்சித்து பார்த்த போது  தொநூற்றி எட்டு   விகிதம்  வெற்றியாம் இது  நான் அறிந்த  செய்தி ஆச்சி “:

 

“எடியே பிள்ளை உனக்கு இன்னும் ஆறு மாதத்தில்    வியாழ சுகம் வரும்    அப்ப உன்  கலியாணத்தை  வைப்பம்  எண்டு  உன் அப்பாவுக்கு சொல்லுறன்    இந்த கொரோனா நோய் முற்றாக  இல்லாமல் போக வேண்டும். இன்னொரு கேள்வி பிள்ளை எந்த நாட்டவன் இந்த கிருமியை தோற்றுவித்தவன் பலர்  சொல்லினம் சீனாக்காரன் என்கினம்

அவன் தான் பாம்பு தவளை வெளவால் எண்டு  கண்ட குப்பபைகளை   சாப்பிடுகிறவன் “ கோகிலா  ஆச்சி  சொன்னாள்

 

 “யார் உனக்கு இதை சொன்னது”

 

“ வேறு யார்  பக்கத்து  வீட்டு  பங்கஜம்  தான் “

 

“ அவள் தான் உனக்கு கூகுல்  நான்  வேள்விப் பட்டேன் உன் பாட்டன் ஒரு வேட்டை  காரணாம் வன்னி காட்டுக்கு  போய்  வௌவால்  புறா  காட்டு சேவல் சுட்டு வந்து கொடுத்தால்  நீ  சமைத்து கொடுப்பியாமே  என் அப்பா  சொன்னார் “

 

 “அது மாம்பழ வௌவால் எங்கள் ஊர் வௌவால்களை ஒரு  கிருமியும்  நெருங்காது  பிற வௌவால்கள் உணவு இல்லாமல் தவிக்கும் போது தன் உடம்பிலிருந்து சிறிதளவு குருதியை மற்ற வௌவால்கள் எடுத்து கொள்ள அனுமதிக்கும்.

 

“ சரி  சரி எனக்கு  வேலைக்குப்  போக  நேரமாச்சு மத்தியானம் அம்மாவிடம் கருவாடும் முருங்கக்காயும் போட்டு குழம்பு வைக்கச் சொல்ல  மறந்திடாதே என்ன ” ?

 

“சொல்லுறன் சொல்லுறன் .அவவுக்குப்  போனிலை மச்காளோடை   வம்பு பேச  நேரம் சரி” என்றாள் சிரித்த  படியே கோகிலா  கிழவி .

டாக்டர் சந்திரா  ஸ்டெதாஸ்கோப்பும்  கையுமாக காரில்  ஏறி சென்றாள்.

 

(யாவும் புனைவு)